Scroll to top

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்: அண்ணன் அல்லு அர்ஜூன் பாராட்டு


admin - April 16, 2021 - 0 comments

அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல் ‘விலாத்தி ஷராப்’ (Vilayati Sharaab) யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ள நிலையில் அல்லு அர்ஜூன் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
அல்லு அர்ஜூனின் இளைய சகோதரர் அல்லு சிரிஷ். இவர் அண்மையில் முதன்முறையாக இந்தி மொழியில் சிங்கிள் ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட்ட்டார். ‘விலாத்தி ஷராப்’ (Vilayati Sharaab) என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் பாடல், குறுகிய காலத்தில் யூடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும், அல்லு சிரிஷின் இந்தப் பாடலை வைத்து இளைஞர்கள் பலரும் நடனமாடி டேன்ஸ் கவர் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், தனது சகோதரர் சிரிஷை சமூக வலைதளத்தில் வெகுவாகப் பாராட்டியுள்ளார் நடிகர் அல்லு அர்ஜூன்.
அதில் அவர், யூடிபில் 100 மில்லியன் பார்வைகளைத் தொட்டதற்கு மிகப்பெரிய வாழ்த்துகள். உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். ஒட்டுமொத்த குழுவுக்கும் எனது வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இசை ரசிகர்கள் அனைவருக்குமே நன்றி. இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் தங்களின் அன்பை ‘ விலாத்தி ஷராப்’ பாடலில் பொழிந்து அதனை மாபெரும் வெற்றியாக்கியுள்ளீர்கள். 100 மில்லியன் பார்வைகளைக் கடக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. தர்ஷன் ராவல், நீதி மோகன், ஹெலி தருவாலா மற்றும் ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துகள், எனக் கூறியுள்ளார்.
ஏபிசிடி, ஸ்ரீரஸ்து சுபமஸ்து, ஒக்கஷனம் ஆகிய படங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் நடனக் காட்சிகளைக் கொடுத்த அல்லு சிரிஷ், தமிழில் கவுரவம், மலையாளத்தில் 1971: பியாண்ட் பார்டர்ஸ் ஆகிய படங்களில் தனது பிம்பத்தை நிலைநாட்டினார். இப்போது இண்டி மியூசிக் லேபிளின் தயாரிப்பில் ‘விலாத்தி ஷராப்’ (Vilayati Sharaab) என்ற குத்தாட்டப் பாடலைக் கொடுத்து அதை இமாலய வெற்றியாக்கி பெரும் ரசிகர் பட்டாளத்தை ஈர்த்துள்ளார். இந்தப் பாடல்தான் இப்போது பாலிவுட் டேன்ஸ் பாடல்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

Post a Comment

Your email address will not be published. Required fields are marked *